அப்பா, அம்மாவை க த்தியால் கு த்தினார் : நேரில் பார்த்த 5 வயது மகனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

அப்பா, அம்மாவை க த்தியால் கு த்தினார் : நேரில் பார்த்த 5 வயது மகனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

அம்மாவை, அப்பா க த்தியால் கு த்தி கொ லை செய்தார் என்று 5 வயது மகன் பொலிசாரிடம் அ திர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். திருவண்ணாமலை, செஞ்சி, மேலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு அகிலா(32) என்ற சகோதரி உள்ளார்.

அகிலாவுக்கும் சென்னையைச் சேர்ந்த தனசேகரனுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில் மகன் இருக்கிறான். திருமணமான 6 மாதத்திலேயே கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், குணசேகரன் வீட்டுக்கு அகிலா வந்துவிட்டார்.

குணசேகரனும் அகிலாவும் சென்னை பெருங்குடி பகுதியில் குடியிருந்து வந்தனர். சகோதரிக்காக குணசேகரன் திருமணம் செய்யாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25-ம் திகதி அகிலா, அகிலேஷை அழைத்துக்கொண்டு தனசேகரன் குடியிருக்கும் நீலாங்கரை திருவள்ளூர் நகருக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரிடம், அகிலேஷ் படிப்பு செலவுக்குப் பணம் வேண்டும் என்றும் தன்னுடைய தங்க நகைகளைத் தரும்படியும் அகிலா கேட்டுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே கடும் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் ஆ த்திரமடைந்த தனசேகரன் அவரை ச ரமாரியாக க த்தியால் கு த்தியதால் ப ரிதாபமாக உ யிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் உ டலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் கொ லையை நேரில் பார்த்த 5 வயது சிறுவன் அகிலேஷ், அம்மாவை அப்பா க த்தியால் கு த்தினார். அப்போது அம்மா சத்தம் போட்டாங்க, ஆனாலும் அப்பா விடவில்லை. ர த்தம் வந்தது என்று மழலை மொழியில் தெரிவித்துள்ளார். இதையடுத்து மனைவியைக் கொ லை செய்த குற்றத்துக்காகத் தனசேகரன் மீது கொ லை வழக்கு பதிவு செய்த பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.

மேலும் பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில், தனசேகரன் வேலை செய்யாமல் ஊர் சுற்றியபடி இருந்துள்ளார். ஆனால் திருமணத்திற்கு முன்பு, தான் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி, கம்ப்யூட்டர் முன்பு இருக்கும் புகைப்படத்தை காட்டி அவரை ஏமாற்றியுள்ளார்.

அகிலாவும் இவரை நம்பி திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்பு இது குறித்து கேட்ட போது, தனசேகரன் நீ வேலை செய்து என்னைக் காப்பாற்று என்று கூறியதாக உறவினர்கள் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.

You might also like