பிக் பாஸ் கவினின் தாய்க்கு 7 ஆண்டு சிறை தண்டனை!!

பிக் பாஸ் கவினின் தாய்க்கு 7 ஆண்டு சிறை தண்டனை!!

சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் கவின். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கவின் தாயார் பண மோ சடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கே கே நகர் ஐ சேர்ந்த கவினின் தாயாரான ராஜலட்சுமியும் மற்றும் அவரது மருமகள் ராணியும், அருணகிரி மற்றும் தர்மராஜ் ஆகியோருடன் இணைந்து சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிறுவனத்தில் மொத்தத்தில் 34 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர். ஆனால் இந்த சீட்டு கம்பெனியில் பணத்தை கட்டி வந்த யாருக்கும் பணத்தை திருப்பித் தராததால் இந்த கம்பெனியை நடத்தி வந்த கவியின் தாயார் ராஜலட்சுமி அவரது மருமகள் ராணி அருணகிரி சொர்ண ராஜன் ஆகியோர் மீது திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரில் பாதிக்கப்பட்ட 34 நபர்களுக்கு 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை திருப்பித் தரவேண்டும் என்று கடந்த 2007 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. 12 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொர்ண ராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இ றந்த நிலையில் தற்போது கவியின் தாயார் ராஜலட்சுமி அவரது மருமகள் ராணி ஆகியோர் பண மோ சடியில் ஈடுபட்டு உள்ளது தற்போது உறுதியாகியுள்ளது.

எனவே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இந்த நால்வருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும் இந்த வழக்கில் சாட்சி அளித்த 29 பேருக்கு தலா ஒரு லட்சம் என்று 29 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

You might also like