மதம் மாறி திருமணம் செய்துகொண்ட மகள் : ஒருமுறை முகத்தை பார்க்க கெஞ்சும் தாய்!!

தெலுங்கானா மாநிலத்தில் கட்டாய மதம் மாற்றம் செய்யப்பட்டு தங்களுடைய மகள் திருமணம் செய்துவைக்கப்பட்டிருக்கிறாள் என அவருடைய பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இந்திரா என்கிற இளம்பெண், கடந்த ஆண்டு ஜூலை 29ம் திகதியன்று முஸ்லீம் மதத்தை சேர்ந்த முகமது ரிஸ்வான் அகமது என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவு செய்த இந்திரா, ஜுனைரா நர்மின் என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டு மதம் மாறியுள்ளார்.

இந்த நிலையில் திருமணம் முடிந்து ஒரு வருடம் கழித்து அவருடைய பெற்றோர், தங்களுடைய மகள் மூளைச்சலவை செய்யப்பட்டு, லவ் ஜிகாத் மூலம் திருமணம் செய்யவைக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரிடம் புகார் கொடுக்க முன்வந்துள்ளனர்.

ஆனால் அந்த புகாரை பொலிஸார் வாங்க மறுத்துள்ளனர். இதற்கு பின் செய்தியாளரை சந்தித்த இந்திராவின் பெற்றோர், “அவர்கள் இருவரும் மேஜர்களாக இருந்தாலும், அவர்கள் ஏன் காவல் நிலையத்திற்கு வந்து தங்கள் முகத்தை எங்களுக்குக் காட்டவில்லை? எங்கள் மகள் பாதுகாப்பாக இல்லை. நாங்கள் அவளுடைய முகத்தைப் பார்க்க விரும்புகிறோம்.

“எங்கள் மகள் எங்கே? அவள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டிருக்கிறாள். துபாய் அல்லது சிரியாவில் அவளை ‘விற்க’ ஒரு திட்டம் தயாரிக்கப்படுகிறது. எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நாங்கள் த ற்கொ லை செய்துகொள்வோம் என தெரிவித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொலிஸார், “இந்த ஜோடி 2018 ஜூலை மாதம் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டது. அப்போது நடந்த சம்பவம் அவரது பெற்றோருக்குத் தெரியும். கட்டாயமாக மாற்றப்பட்டதற்கு பெற்றோருக்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால், அவர்கள் அதனுடன் முன்வரலாம்.” என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த இளம்பெண், என்னைப் பற்றி எந்த செய்தி பரப்பப்பட்டாலும் அது போலியானது. எனது விருப்பத்திற்கு ஏற்ப மதம் மாறி திருமணம் செய்து கொண்டேன்.

யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. இந்தியாவில், ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் எந்த மதத்தையும் பின்பற்ற சுதந்திரம் உள்ளது. யாருக்காவது பிரச்சினை இருந்தால், அது அவர்களின் பிரச்சினை, என்னுடையது அல்ல. நான் வயதில் பெரியவள். இதைச் செய்ய எனக்கு சுதந்திரம் இருக்கிறது என கூறியுள்ளார்.

You might also like