வவுனியாவில் வழங்கு வழங்கு வேலைவாய்ப்பினை வழங்கு பட்டதாரிகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் இன்று (30.03.2017) காலை 9.30மணியளவில் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஒன்றினைந்த வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் வவுனியா மாவட்ட வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றினைந்து தமக்கான வேலைவாய்ப்பினை வழங்குமாறு தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என பட்டதாரிகள் ஒன்றினைந்து ஏமாற்றாதே ஏமாற்றாதே பட்டதாரிகளை எமாற்றாதே, வழங்கு வழங்கு வேலைவாய்ப்பினை வழங்கு கொடு கொடு வேலைவாய்ப்பினைக் கொடு போன்ற வசனங்களைத் தாங்கியவாறு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்ற வேலையில்லாத பட்டதாரிகள் பஜார் வீதிவழியாக வந்து ஹாரவப்பத்தானை வீதியுடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்து உதவி அரசாங்க அதிபர் என்.கமலதாசன் அவர்களிடம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், பிரதம மந்திரி, ஜனாதிபதிக்கான மகஜரை கையளித்தனர்.

கடந்த பல நாட்களாக வடகிழக்குப் பகுதிகளில் வேலையில்லாப்பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பினை வழங்குமாறு தெரிவித்து பல போராட்டங்களை முன்னெடுத்த வருகின்றனர்.

 

You might also like