வவுனியாவை இலங்கையின் தலைநகரமாக மாற்றவிருக்கும் பெண்!!

வவுனியாவை இலங்கையின் தலைநகரமாக மாற்றவிருக்கும் பெண்!!

வவுனியா நகரை, இலங்கையின் தலைநகராகமாக்கும் நிலைப்பாட்டிலேயே தான் உள்ளதாக இலங்கை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி அஜந்தா பெரேரா தெரிவிக்கின்றார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“யு த்தக் காலத்தில் தான் வவுனியா நகரில் பணியாற்றியிருந்தேன். இந்நிலையில், வவுனியாவிலுள்ள தமிழ் மக்களை தான் ஆதரிக்கின்றேன்.

இலங்கையில் அனைத்து வளங்களையும் கொண்ட வவுனியாவை, நாட்டின் தலைநகரமாக்குவதே சிறந்தது. தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில், வவுனியாவை நிச்சயமாக தலைநகரமாக்குவேன்.

அத்துடன், இலங்கையில் வாழும் தமிழர்களின் கோரிக்கைகளை, அவர்களின் எண்ணப்பாட்டிற்கு அமைவாகவே தான் நிறைவேற்ற தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like