வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் ஊழியர்களுக்கு சிங்கள வகுப்புகள் : சேவையினை பெற முடியாது தவிக்கும் பொதுமக்கள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் ஊழியர்களுக்கு சிங்கள வகுப்புகள் : சேவையினை பெற முடியாது தவிக்கும் பொதுமக்கள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் கடமை நேரத்தில் ஊழியர்களுக்கு சிங்கள வகுப்புகள் நடைபெறுவதினால் தாம் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மும்மொழி கொள்கை செயற்றிடத்தில் கீழ் பிரதேசசபையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிங்கள வகுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த சிங்கள வகுப்பு பிரதேசசபையின் கேட்போர் கூடத்தில் மாலை 3.00மணி தொடக்கம் 4.00 மணிவரை இடம்பெறுவதினால் பொதுமக்கள் பிரதேசசபையின் சேவைகளை பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே பிரதேசசபை ஊழியர்களுக்கான சிங்கள வகுப்பினை ஊழியர்களின் கடமை நேரம் (8.15-4.15) தவிர்ந்த ஏனைய நேரத்திலோ அல்லது சனி, ஞாயிறு தினங்களிலோ மேற்கொள்ளுமிடத்து பிரதேச சபையின் சேவைகளை எம்மால் பெற்றுக்கொள்ள இலகுவாக அமையும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதேச சபையின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு நேற்றையதினம் பல பொதுமக்கள் பிரதேசசபைக்கு சென்றிருந்த போதிலும் ஊழியர்கள் தற்போது சிங்கள வகுப்பில் உள்ளதாக தெரிவித்து திங்கட்கிழமை வந்து சேவையினை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு பிரதேச சபையின் ஊழியரோருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like