இன்றைய ராசிபலன் 01.09.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன் 01.09.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்:

பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

ரிஷபம்:

சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம்:

உற்சாகமான நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மனம் உற்சாகமாகக் காணப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

கடகம்:

சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

சிம்மம்:

எதிர்பாராத தனலாபம் உண்டாகும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கன்னி:

வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

துலாம்:

மகளின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வாகனத்தில் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சி சாதகமாக முடியும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்:

அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படும்.

தனுசு:

நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். அறிவுபூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். காரியங்கள் அனுகூலமாக முடியும். தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சங்கடங்கள் தோன்றக்கூடும்.

மகரம்:

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். அலுவலகத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. தந்தையாலும் தந்தை வழி உறவினர்களாலும் நன்மைகள் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

கும்பம்

பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் சிறு வருத்தம் ஏற்படவும் கூடும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மைகள் ஏற்படும்.

மீனம்:

சகோதர வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத உறவினர்கள் வருகை உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும்.

You might also like