வவுனியாவிலுள்ள மதத்தலங்களுக்கு சென்ற தேசிய வீடமைப்பு நிர்மணத்துறை ஊழியர்கள் : நடந்தது என்ன?

வவுனியாவிலுள்ள மதத்தலங்களுக்கு சென்ற தேசிய வீடமைப்பு நிர்மணத்துறை ஊழியர்கள் : நடந்தது என்ன?

தேசிய வீடமைப்பு நிர்மணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என விசேட பூஜை வழிபாடுகள் வவுனியா இந்து, பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டுதளங்களில் இடம்பெற்றது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் இன்று மாலை 5 மணிக்கு குறித்த விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

அந்தவகையில் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயம், குருமன்காடு காளி கோவில், இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம், வவுனியா சகர பௌத்த விகாரை, வவுனியா பள்ளிவாசல் என்பவற்றில் இவ் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆசிவேண்டியும், அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற இறைவனின் ஆசி வேண்டியும் விசேட ஆராதனைகளும், பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது. இதில் வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like