வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸாருக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பொருள்

வீடொன்றை சுற்றிவளைத்த பொ லிஸாருக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பொருள்

புத்தளம் – மணல்குண்டுவ பிரதேசத்தில் விலை மதிப்பற்ற இரு கஜ முத்துகளை மறைத்து வைத்திருந்த நபரொருவர் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ச ந்தேகநபர் நேற்றைய தினம் புத்தளம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே அவரை வி ளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புத்தளம், மணல்குண்டுவ பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஹெ ரோயின் வர்த்தகரே வி ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் – மணல்குண்டுவ பிரதேசத்தில் ஹெரோயின் வர்த்தகர் ஒருவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கஜ முத்துக்கள் புத்தளம் பொலிஸ் ஊ ழல் ஒ ழிப்பு பிரிவின் அ திகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபரின் வீடு சுற்றிவளைக்கப்பட்டு சோ தனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போதே விலைமதிப்பற்ற இரண்டு கஜ முத்துக்களும், 620 மில்லிகிராம் ஹெ ரோயின் போ தைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கஜ முத்துக்களை வனாதவில்லுவ, எலுவன்குளம் பிரதேசத்தில் கொள்வனவு செய்ததாக சந் தேகநபர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

மேலும், ஆய்வுக்காக மாணிக்ககல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபைக்கு கஜ முத்துகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You might also like