வவுனியா தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் களேபரம்: இளைஞரணி உறுப்பினர்கள் அடிதடி!

வவுனியா தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் களேபரம்: இளைஞரணி உறுப்பினர்கள் அடிதடி!

தமிழரசு கட்சியின் வவுனியா இளைஞரணி உறுப்பினர்கள் இருவர் தங்களுக்குள் முட்டிமோதிக்கொண்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞரணியை சேர்ந்த சிந்துஜன் என்பவரும், சீலன் என்பவருமே இவ்வாறு மல்லுக்கட்டியுள்ளனர். தொலைபேசி வாயிலாக ஏற்பட்ட முரண்பாடு, நேரில் சந்தித்தபோது அடிதடியாக மாறியது.

தமிழரசுகட்சியின் தலைமை அலுவலகமான தாயாகத்திற்கு முன்பாக சந்தித்துகொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்அரசு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான ப.சத்தியலிங்கத்துடன் சீலன் என்பவர் வாகனத்தில் வந்து இறங்கியபோது, அந்த பகுதிக்கு சிந்துஜனும் வர, களேபரம் ஆரம்பித்தது.

மல்லுக்கட்டிய இருவரையும் பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் சமாதானம் செய்த ப.சத்தியலிங்கம், அவர்களை அலுவலகத்திற்குள் கூட்டிச் சென்றார்.

அடிதடியின் பின்னர் கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள் கட்சியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு சம்பவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like