வவுனியா கனகராயன்குளம் பகுதியில் மணல் ஏற்றச்சென்றவருக்கு நேர்ந்த க தி : நீதி கிடைக்குமா?

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் மணல் ஏற்றச்சென்றவருக்கு நேர்ந்த க தி : நீதி கிடைக்குமா?

வனஇலாகாவினர் தா க்குதல் நடத்தியதாக கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் வவுனியா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கனகராயன்குளம், விஞ்ஞானகுளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நாகலிங்கம் ராஜ்கரன் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை கனகராயன்குளம், குறிச்சுட்டகுளம் பகுதியில் கூலிக்கு மணல் ஏற்றுவதற்காக வேறு சிலருடன் சென்றுள்ளார்.

மணல் ஏற்றும் இடத்தின் கேற் 5 மணிக்கு தான் திறக்கப்படும். இதனால் குறித்த நபர் நிலத்தில் படுத்திருந்துள்ளார். இதன்போது வனஇலாகாவினர் சிலரும், வனஇலாகாவில் பணிபுரியும் காவலாளியும் அங்கு வந்து க ள்ள மரம் ஏற்றப் போகின்றீர்களா என என்னை கேட்டு பிஸ்ரலால் மிரட்டியதுடன், கன்னம் மற்றும் அடி வயிற்றில் தா க்கினர். வனஇலாகாவில் பணிபுரியும் காவலாளியே அடிவயிற்றில் பலமாக தாக்கினார். அதன் பின் டிப்பரையும் பார்த்து விசாரித்து விட்டு நீங்கள் மணல் தான் ஏற்ற வந்தீர்கள் என கூறி விடுவித்தனர். இதன்பின் கனகராயன்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டேன்.

இரு தினங்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பினேன். இது தெர்டபில் கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போதும் வனஇலாகாவினர் இது தொடர்பில் பொறுப்புடன் செயற்படவில்லை.

கூலி வேலைக்கு செல்லும் குறித்த நபர் அ டிவயிற்றில் தா க்கியமை காரணமாக வேலை செய்ய முடியாத நிலையில் வீட்டில் தங்கியுள்ளதுடன் கைக்குழந்தையுடன் அவரது குடும்பமும் வறுமையால் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் தாக்குதல் சம்பவத்திற்கு நீதி வேண்டி குறித்த நபர் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

You might also like