முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலச் சுறா!!

முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலச் சுறா!!

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் திமிங்கிலச் சுறாவொன்று உயிருக்குப் போராடிய நிலையில் நேற்று கரை ஒதுங்கியுள்ளது.

இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கலச் சுறா மீன் அப்பகுதி மீனவர்களின் பெரும் முயற்சியின் மூலம் மீண்டும் ஆழ்கடலில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இது போன்ற திமிங்கலச் சுறா மீன்கள் கரை ஒதுங்குவது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொக்கிளாய் மற்றும் முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் புள்ளிசுறாவொன்று கரை ஒதுங்கிய நிலையில், அதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது முறையாக முள்ளிவாய்க்கால் கடற்கரையில் திமிங்கிலச் சுறாவொன்று கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

You might also like