கொழும்பில் புதிதாக திருமணம் செய்த தம்பதிக்கு நடந்த சோகம்!!

கொழும்பில் புதிதாக திருமணம் செய்த தம்பதிக்கு நடந்த சோகம்!!

கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பிரதேசத்தில் ஒரு வாரத்திற்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்ட இளைஞன் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளார்.

கடல் கொந்தளிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தாமல் 5 பேருடன் கடலுக்கு குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 25 வயதான இளம் குடும்பஸ்தர் உ யிரிழந்துள்ளார்.

கடலுக்கு சென்ற இளைஞன், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை கடலில் மிதந்த நிலையில் அவரது ச டலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த இளைஞனின் மனைவியும் குறித்த சந்தர்ப்பத்தில் இணைந்திருந்த போதிலும் அவர் ஆபத்தின்றி உயிர் தப்பியுள்ளார். களனி டயர் தொழிற்சாலையில் இயந்திர செயற்பாட்டாளரான, தினுஷ ஜயங்க சுரேந்திர என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like