பேஸ்புக் விருந்தில் இளைஞர், யுவதிகள் செய்த அட்டகாசம்!!

பேஸ்புக் விருந்தில் இளைஞர், யுவதிகள் செய்த அட்டகாசம்!!

பாணந்துறை தல்பிட்டிய சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் நடந்த பேஸ்புக் விருந்தொன்றை நேற்று முன்தினம் இரவு சுற்றிவளைத்த ஹொரணை மதுவரி திணைக்கள அலுவலக அதிகாரிகள் க ஞ்சா, கேரளா க ஞ்சா ஆகியவற்றுடன் 11 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

சன்டே செஷன் என பெயரிடப்பட்டிருந்த இந்த இரவு நேர விருந்தில் 150க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துக்கொண்டிருந்ததாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேஸ்புக்கில் வெளியிப்பட்ட விளம்பரத்திற்கு அமைய இளைஞர், யுவதிகள் இந்த விருந்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.

மாலை 6 மணி முதல் 12 மணி வரையான காலத்திற்கு இளைஞர்களிடம் 20 ஆயிரம் ரூபாயும் யுவதிகளிடம் ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மதுவரி திணைக்கள அதிகாரிகள் 5 நபர்களை விருந்துக்கு அனுப்பி வைத்து, இரகசிய தகவலுக்கு அமைய விருந்து நடைபெற்ற இடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.

ஹோட்டலில் ஒதுக்கு புறமான பகுதியில் குறைந்த விளக்கு வெளிச்சத்தில் இசையுடன் இந்த விருந்து நடத்தப்பட்டுள்ளது. விருந்தில் கலந்துக்கொண்டிருந்த இளைஞர், யுவதிகள் போ தைப் பொருட்களை பயன்படுத்தி போ தையில் இருந்துள்ளனர்.

எனினும் அவர்களிடம் இருந்து போ தைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதுடன் எச்சரித்து விடுவிக்கப்பட்டதாக ஹொரணை மதுவரி திணைக்கள அலுவலக பொறுப்பதிகாரி பிரேமஷ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள், பாணந்துறை, களுத்துறை, மொறட்டுவை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

You might also like