வவுனியா மக்களுக்கு இன்று அதிகாலையிலே கிடைத்த பேரடியான செய்தி :வவுனியாவிற்கேன இருந்த ஒரு சேவையும் இனி இல்லை

வவுனியா மக்களுக்கு இன்று அதிகாலையிலே கிடைத்த பேரடியான செய்தி :வவுனியாவிற்கேன இருந்த ஒரு சேவையும் இனி இல்லை

கொழும்பில் இருந்து வவுனியா வரை வந்த வவுனியா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், இன்று (05.09) முதல் காங்கேசந்துரை வரை “ஸ்ரீ தேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்” ஆக தனது சேவையை ஆரம்பிக்கவுள்ஏது.

கொழும்பு கோட்டையிலிருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தை இரவு 10.00 மணி வந்தடைந்து காங்கேசந்துறைக்கை இரவு 10.16 க்கு குறித்த ரயில் செல்லவுள்ளது.

போல்கஹவேலா, குருநாகல், மஹோ, கல்கமுவா, தம்புத்தேகம, அனுராதபுரா புதிய நகரம், அனுராதபுரம், மதவாச்சியா,வவுனியா, அறிவியல் நகர், கிளிநோச்சி, கொடிகாமம், யாழ்ப்பாணம், காங்கேசந்துறை ஆகிய இடங்களில் குறித்த ரயில் நிறுத்தப்படும்.

காங்கேசந்துரையில் இருந்து காலை 3.45 க்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டைக்கு காலை 10.24 க்கு சென்றடையவுள்ளது.

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கொடிகாமம், கிளிநொச்சி, அறிவியல் நகர், வவுனியா, மதவாச்சியா, அனுராதபுரம் அனுராதபுரா புதிய நகரம், தம்புத்தேகம, கல்கமுவா, மஹோ,குருநாகல், போல்கஹவேலா, மருதானை, கோட்டை ஆகிய இடங்களில் நிறுத்தப்படவுள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஸ் 13 பவர் ரயில் மூலம் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது.

அத்துடன், சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கான இரு புதிய ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த ஸ்ரீ தேவி சேவையுடன் யாழ்ப்பாணத்திற்கான புகையிரதங்கள் 7 ஆக உயரும். வடபகுதி மக்களின் பயன்பாட்டினைப் பொறுத்தே நிரந்தர சேவைகளாக இவை அமையவுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியாவிலிருந்து ஆசனமுற்பதிவுகள் எவையும் மேற்கொள்ளாமல் பொதுமக்கள் செல்லக்கூடியதாகவிருந்த ஒர் புகையிரதமும் தற்போது கங்கேசன்துறையிலிருந்து ஆரம்பித்திருப்பது வவுனியாவிலிருந்து குறித்த புகையிரதத்தில் பயணம் மேற்கொள்ளம் பொதுமக்கள் அசோகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

You might also like