இன்றைய ராசிபலன் 05.09.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன் 05.09.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்:

அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்க நேரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:

மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம்:

வெளிநாட்டில் இருந்து நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஆனால், பிற்பகலுக்குமேல் உங்கள் காரியங்களில் சில தடை தாமதங்கள் உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனுகூலமாக முடியும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கடகம்:

கடக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு அலுவலகப் பணிகளின் காரணமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். உத்தியோகத் தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

சிம்மம்:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து, ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும்.

கன்னி:

வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். தாய்வழி உறவுகளால் சிறுசிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை உண்டாகும்.

துலாம்:

அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர் செல்ல நேரிடும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.

விருச்சிகம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

தனுசு:

கோயில் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேருவதால் மகிழ்ச்சி உண்டாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

மகரம்:

பிற்பகலுக்குமேல் சிலருக்கு லேசான தலைவலி வரக்கூடும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும்.

கும்பம்:

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்கு மேல். எனவே, புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மைகள் ஏற்படும்.

மீனம்:

வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி இன்றைக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். பேச்சிலும் செயலிலும் பொறுமை அவசியம். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

You might also like