வெளிநாடு சென்ற தமிழ் இளைஞனுக்கு நடந்தது என்ன?

வெளிநாடு சென்ற தமிழ் இளைஞனுக்கு நடந்தது என்ன?

வெளிநாடு ஒன்றுக்கு சென்ற தமிழ் இளைஞனை காணவில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வேலைவாய்ப்புக்காக சென்ற தம்பிமுத்து சாந்தகுமாரன் இளைஞனே காணாமல் போயுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதி வேலைவாய்ப்புக்காக சென்ற நிலையில், அவர் காணாமல் போயுள்ளார் என பணியகம் தெரிவித்துள்ளது. சாந்தகுமாரன் தொடர்பான தகவல் தெரிந்தால் பணியகத்திற்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தொலைபேசி இலக்கமான 011-2864136 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும். பல வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்ற போதும் இதுவரை அவர் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை என பணியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You might also like