அண்ணன் உ யிரிழந்தது தெரியாமல் திருமணம் செய்து கொண்ட தங்கை : கண்ணீருடன் மூடிமறைத்த உறவினர்கள்!!

அண்ணன் உ யிரிழந்தது தெரியாமல் திருமணம் செய்து கொண்ட தங்கை : கண்ணீருடன் மூடிமறைத்த உறவினர்கள்!!

தமிழகத்தில் தங்கை திருமணத்துக்காக சென்று கொண்டிருந்த அண்ணன் சாலை விபத்தில் உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சின்னமணலி பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (65). இவருக்கு மஞ்சுநாதன் (43) என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். மஞ்சுநாதன் சென்னையில் வேலை செய்து வந்த நிலையில் அபிராமிக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

திருமணத்திற்காக ஒரு காரில் சரஸ்வதி, மஞ்சு நாதன், முகிலன் ஆகியோர் அதிகாலையில் புறப்பட்டனர். காரை அதே ஊரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் ஓட்டினார். காரானது காலை சுமார் 6 மணிக்கு ஆத்தூர், அப்பம்மசமுத்திரம் என்ற இடத்தில் சென்ற போது அங்கிருந்த பாலத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் கார் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியது. இந்த விபத்தில், மணப்பெண்ணின் சகோதரர் மஞ்சுநாதன் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இ றந்தார்.

பின்னால் உள்ள இருக்கையில் இருந்த இவரது தாய் சரஸ்வதி உறவினர் முகிலன், ஓட்டுனர் ஆனந்தகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் சரஸ்வதிக்கு 2 கால்களும் முறிந்தன. 3 பேரும் வலியால் கதறினர். அவர்களை, அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையே மஞ்சுநாதன் சடலத்தை பார்த்து கதறி அழுத உறவினர்கள் விபத்து குறித்து அபிராமியிடம் தெரிவிக்க வேண்டாம், திருமணம் தடைபடாமல் நடக்கட்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து அனைவரும் சம்பவ இடத்தில் இருந்து சோகத்துடன் புறப்பட்டு திருமணம் நடைபெறும் இடத்துக்கு சென்றனர். பின்னர் அபிராமிக்கு எந்த தகவலையும் சொல்லாமல், கல்யாணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. இதன் பிறகு தான் அண்ணன் இ றந்த விடயம் அவரிடம் சொல்லப்பட்டது

You might also like