வீட்டில் ச டலமாக கிடந்த அழகான குடும்பம் : கடிதம் சிக்கியது!!

வீட்டில் ச டலமாக கிடந்த அழகான குடும்பம் : கடிதம் சிக்கியது!!

இந்தியாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொ லை செய்து கொண்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் Amalapuram நகரை சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் ராஜூ (48). இவர் மனைவி லஷ்மிதேவி (45). இவர்கள் மகன் கிருஷ்ணா சந்தீப் (25).

இவர்கள் மூன்று பேரும் கடந்த மாதம் 30ஆம் திகதி வீட்டில் ச டலமாக கிடந்தனர். அவர்கள் வீட்டுக்கு வந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் அவர்கள் ச டலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக மூவரும் தற்கொ லை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததால் இம்முடிவை அவர்கள் எடுத்தது தெரியவந்துள்ளது.

கிருஷ்ணா கைப்பட எழுதிவைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் பிரசாத் என்பவர் தனது மூன்று நண்பர்களோடு சேர்ந்து என் தந்தையை சந்தித்தார்.

பின்னர் தன்னிடம் Rice Pulling Vessel என்னும் மந்திர பொருள் உள்ளது, இதை வீட்டில் வைத்தால் பணம் அதிகளவில் பெருகி மிக பெரிய கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள் என கூறினார். இதை நம்பி என் தந்தை ரூ 5 கோடியை பிரசாத்திடம் இழந்தார் என எழுதப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொலிசார் பிரசாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

You might also like