ஓடுபாதையில் ஒன்றுடன் ஒன்று திடீரென மோதிக்கொண்ட பயணிகள் விமானம்!!

ஓடுபாதையில் ஒன்றுடன் ஒன்று திடீரென மோதிக்கொண்ட பயணிகள் விமானம்!!

ரஷ்யாவில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று திடீரென மோதிக்கொண்டதை அடுத்து பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள முன்னணி சர்வதேச விமான நிலையமான ஷெரெமெட்டியோ விமான நிலையத்தில் ஏரோஃப்ளோட் விமானம் பெய்ஜிங்கிற்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது.

அந்த சமயத்தில் டிராக்டரால் இழுத்து செல்லப்பட்ட பயணிகள் இல்லாத போயிங் 777 விமானத்தின் இறக்கையின் மீது வேகமாக மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில் காயம் அல்லது உ யிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சம்பவம் நடைபெற்ற உடனே விமானத்தில் இருந்த 229 பயணிகளும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பிற்பகல் நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்ன நடந்தது என்பதை அறிய இரண்டு விமானங்களையும் பரிசோதித்தனர்.

You might also like