சற்று முன் வவுனியாவில் தொடர் குடியிருப்பு பகுதியில் தீ: விரைந்து செயற்பட்ட நகரசபை தீயணைப்பு படையால் பாரிய அனர்த்தம் தவிர்ப்பு

சற்று முன் வவுனியாவில் தொடர் குடியிருப்பு பகுதியில் தீ: விரைந்து செயற்பட்ட நகரசபை தீயணைப்பு படையால் பாரிய அனர்த்தம் தவிர்ப்பு

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள தொடர் குடியிருப்புக்குள் இருந்த தென்னை மரமொன்றில் திடீரென தீப்பிடித்தது. நகரசபை தீயணைப்படையினர் விரைந்து செயற்பட்டமையால் பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டுள்ளது.

இன்று (10.09.2019) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் அமைந்துள்ள தொடர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குப்பைகளுக்கு நெருப்பு வைத்துள்ளனர். இதன்போது குறித்த நெருப்பு பற்றி எரிந்த போது அருகில் இருந்த தென்னை மரம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

அதனை அணைக்க வீட்டுக்காரர் முயற்சித்த போதும் அது பயனளிக்காமையால் உடனடியாக நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தெரியப்படுத்தினர். விரைந்து செயற்பட்ட நகரசபை தீயணைப்பு பிரிவினர் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் ஏற்பட இருந்த பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டது.

You might also like