இலங்கையில் ஒக்டோபர் 2 வரை மூடப்படவுள்ள பாடசாலைகள்!

இலங்கையில் ஒக்டோபர் 2 வரை மூடப்படவுள்ள பாடசாலைகள்!

கா.பொ.தர உயர்தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் காரணமாக இம்மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை 4 பாடசாலைகள் மூடப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு ஆனந்த வித்தியாலயம், கண்டி வித்யார்த்த வித்தியாலயம், மாத்தறை மஹானாம மகா வித்தியாலயம் மற்றும் குருநாகல் லக்தாஸ் டி மெல் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை இன்னும் 23 பாடசாலைகளை பகுதி வாரியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

You might also like