யாழில் ஆட்டோ ஒன்றினால் வீதியில் நின்றவர்களை பந்தாடிய வான் !3 பேர் படுகாயம்

யாழில் ஆட்டோ ஒன்றினால் வீதியில் நின்றவர்களை பந்தாடிய வான் !3 பேர் படுகாயம்

யாழ்.நீா்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பருத்தித்துறையில் இருந்து வந்த ஆட்டோவினை அண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பம் ஒன்று எதிர் திசையில் நின்று மறித்துள்ளது.

இதனை அவதானித்த ஆட்டோ சாரதி வளைவான பாதையில் திருப்பிய போது எதிரே யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த வான் ஒன்றுடன் மோதியதில் ஆட்டோ தடம்புரண்டது.

ஆட்டோ திரும்பிய பகுதியில் வீதிக்கடவை இருந்தும் அதிவேகமாக வந்த வானே விபத்திற்கான காரணம் என விபத்தினை நேரடியாக அவதானித்தோர் தெரிவித்துள்ளனர்.

எதிர்திசையிலிருந்து திரும்பிய ஆட்டோவை பந்தாடிய வான் வீதியில் நின்ற தாய் மற்றும் 12 வயதான மகளையும் மோதி தூக்கி வீசியுள்ளது.

இதில் ஆட்டோ சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

You might also like