வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெ டிகுண்டு : மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் தேடுதல்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெ டிகுண்டு : மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் தேடுதல்

வவுனியா பொது வைத்தியசாலையில் மோப்ப நாயின் உதவியுடன் பொலிசாரால் விசேட தேடுதல் வேட்டை இன்று (11.09.2019) நடைபெற்றது.

வவுனியா பொலிசாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக வெ டிபொருட்கள் ஏதும் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மோப்ப நாயின் உதவியுடன் வைத்தியசாலை அமைந்துள்ள பகுதிகளில் கடும் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

வவுனியா பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, நோயாளர்களின் விடுதிகள் , விபத்துப்பிரிவு , மலசலகூடம் , உணவகம் , அதிகாரிகளின் அறைகள் அமைந்துள்ள பகுதிகளில் கடும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வைத்தியசாலையின் நுழைவாயில் பகுதியில் பொலிசார் பொதிகளை கடும் சோதனையின் பின்னர் அனுமதித்திருந்தனர்.

சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.எனினும் எவ்வித வெ டிபொருள்களும் பொலிஸாரினால் மீட்கப்படவில்லை

You might also like