சற்று முன் யாழ் அங்காடித்தொகுதியில் சகோதரர்களுக்கு இடையில் மோ தல்! சகோதரனின் கை நரம்பை அ றுத்த மற்றைய சகோதரன்!

சற்று முன் யாழ் அங்காடித்தொகுதியில் சகோதரர்களுக்கு இடையில் மோ தல்! சகோதரனின் கை நரம்பை அ றுத்த மற்றைய சகோதரன்!

யாழ்ப்பணம் மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கும் அங்காடித் தொகுதியில் சற்றுமுன்னர் இளைஞர்கள் அடிதடியில் ஈடுப்படிருந்ததாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்று முற்பகல் 11.30 மணியளவில் யாழ் அங்காடித் தொகுதியில் வடைக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவருக்கும் அவரது இரு சகோரர்களுக்குமிடையில் மோதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் வடைக்கடை வைத்திருந்த நபர் தான் வைத்திருந்த க த்தியால் மற்றைய இரு சகோதரர்களையும் தா க்கியுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சகோரர்களிடையே தொலைபேசியில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனடிப்படையிலேயே இன்று நேரடியாக சென்று அது தொடர்பில் பேசியபோது வாய்த்தர்க்கம் முற்றி அடிதடியில் முடிந்துள்ளது.

வடைக்கடை வைத்திருந்த நபர் தன்னிடம் பேச வந்த மற்றைய சகோதரர்கள் இருவருடனும் முரண்பட்டு ஆத்திரத்தில் தான் வைத்திருந்த க த்தியால் ஒரு சகோதரனின் இரண்டு கைகளிலும் வெ ட்டியதில் நரம்பு வெட்டுப்பட்டு ஆ பத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும், மற்றைய சகோதரனுக்கு காலில் வெ ட்டுப்பட்டுள்ளதாகவும் தெவிக்கப்படுகின்றது.

ப டுகாயமடைந்த இருவரும் அங்கிருந்தவர்களின் உதவியுடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த இருவர் மீதும் தா க்குதல் மேற்கொண்ட நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதையடுத்து மற்றைய சகோதரர்களுடன் வந்தவர்கள் தப்பி ஓடிய நபரின் வடைக்கடையை அடித்து உடைத்துள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்தவர்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தப்பி ஓடடிய நபரை மடக்கிப்பிடித்த ஏனையவர்கள் அவரையும் தா க்கியுள்ள நிலையில், அந்த நபரும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ்நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

You might also like