வவுனியாவில் 6 நாட்களாக காணாமல் போன பாடசாலை மாணவன் கண்டுபிடிப்பு : நடந்தது என்ன?

வவுனியாவில் 6 நாட்களாக காணாமல் போன பாடசாலை மாணவன் கண்டுபிடிப்பு : நடந்தது என்ன?

கடந்த 6 நாட்களாக காணாமல் போயிருந்த 14 வயதுடைய வவுனியா மாணவன் மீட்கப்பட்டுள்ளதாக இன்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பூந்தோட்டம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய ஜெயராசா கனிஸ்டன் என்ற பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயலும் மாணவன் கடந்த 7 ஆம் திகதி வேப்பங்குளம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் உறவினர் வீட்டுக்கு குறித்த மாணவன் செல்லவில்லை. வீட்டுக்கும் திரும்பவில்லை. இதனையடுத்து குறித்த மாணவனின் பெற்றோர் உறவினர்களுடன் இணைந்து தேடிய நிலையில் மாணவன் கிடைக்காமையால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்தனர். பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்து இருந்ததுடன், ஊடகங்களிலும் மாணவனை காணவில்லை என்ற செய்தி வெளியாகியிருந்ததது.

இதனையடுத்து நேற்று இரவு (12.09) வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள மாணவனின் நண்பன் ஒருவரின் வீட்டில் குறித்த மாணவன் நிற்பதாக நண்பனின் சகோதரனால் மாணவனின் சனோதரர்களுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அங்கு சென்ற பெற்றோரும், உறவினர்களும் மாணவனை அழைத்து வந்ததுடன், வவுனியா பெலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், நண்பனின் வீட்டிற்கு கரம்போட் விளையாடுவதற்காகவே சென்றதாக பொலிசாரிடம் மாணவன் கூறியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

You might also like