வவுனியாவில் வறுமையிலும் சாதனை படைத்த மாணவி ராம்ராஜ் யாழினி

வவுனியா மூன்றுமுறிப்பு அதக பாடசாலையில் கபொத சாதாரன தர பரீட்சையில் தோற்றி பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவி ராம்ராஜ் யாழினி (8A,C) பெறுபேற்றை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இம்மாணவியின் தந்தை நுவரெலியாவில் உள்ள தோட்டம் ஒன்றில் தோட்ட தொழிலாளியாக கூலி வேலை செய்துவருகிறார் தாயார் வீட்டில் வசிக்கிறார் இம்மாணவிக்கு நான்கு சகோதரர்கள் இவரே மூத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது குடும்ப வறுமையின் காரணமாக வவுனியாவில் உள்ள இவரது உறவினரின் வீட்டிலிருந்தே கல்வி பயின்று வருகிறார் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்

இவரது எதிர்கால இலட்சியமாக தான் வைத்தியராகி வறுமையில் வாழும் மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக கொண்டுள்ளார் எனினும் தனது மேற்படிப்பை தொடர முடியுமா என்ற கேள்வியும் தன்னுள் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காரணம் தனது குடும்ப வறுமையே இதற்கு காரணம் என்கிறார் ஆனாலும் தான் தன் கல்வியை கைவிடமாட்டேன் தனது குறிக்கோளை அடைந்தே தீருவேன் என்றும் அம்மாணவி கூறுகையில் எம் செய்தியாளரின் கண்களில் கண்ணீர் மல்கியதை காணக்கூடியதாக இருந்தது

You might also like