கிளிநொச்சியில் 39 வது நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று(30) 39ஆவது நாளாகவும் தீர்வின்றி தொடர்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை இப்போராட்டம் கடந்த மாதம் 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like