பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபருக்கு கடூழியச் சிறை

பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டை எதிர்நோக்கிய நபருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதி ஆதித்திய பட்டபெந்தி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். இதனை தவிர பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு 25 ஆயிரம் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குற்றவாளி இந்த இழப்பீட்டை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளர்.

இராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி மற்றும் 22ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் குற்றவாளி 16 வயதான பாடசாலை மாணவியை சட்டரீதியான பாதுகாவலர்களிடம் இருந்து கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தி அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

You might also like