செட்டிகுளம், கப்பாச்சி நாமகள் பாடசாலைக்கு பரிசுப் பொருட்கள் அன்பளிப்பு

வவுனியா செட்டிகுளம், கப்பாச்சி நாமகள் பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு கடந்த 23.03.2017 அன்று பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் முதல்வர் திரு. செ.புஸ்பநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வின் விருந்தினர்களாக புளொட் அமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், FEED அமைப்பின் செயலாளர் ஐ.யசோதரன், கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.ஜேசுதாசன், கிராம அலுவலர் பா.பாலகிரிதரன், உலக உணவுத் திட்ட அதிகாரி எஸ்.கிரிதரன், புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் வே.குகதாசன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் மாணவச் சிறார்களுக்கு வழங்கப்பட்ட ரூபா 4000/- பெறுமதியான அனைத்து பரிசுப் பொருட்களையும் புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர் வழங்கியிருந்தனர்.

You might also like