குடிக்க வேண்டாம் என கூறிய தாய் : தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்ட மகன்

மது அருந்த வேண்டாம் என தாய் கூறியதை ஏற்றுக்கொள்ளாத மகன், தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்ட பரபரப்பு சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பதுளை நியூபேக் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிபோதையில் வீட்டுக்குள் நுழைந்த குறித்த இளைஞனை தாய் குடிக்க வேண்டாம் என கண்டித்துள்ளார். எனினும், தாயின் கண்டிப்பை ஏற்க மறுத்த மகன் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் கவலைக்கிடமான நிலையில், தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

You might also like