கனடாவில் இலங்கை பெண் உள்ளிட்ட 10 பேர் மீது வாகனத்தை மோதச் செய்து கொ லை : சந்தேகநபர் கொடுத்த வாக்கு மூலம்!!

கனடாவில் இலங்கை பெண் உள்ளிட்ட 10 பேர் மீது வாகனத்தை மோதச் செய்து கொ லை : சந்தேகநபர் கொடுத்த வாக்கு மூலம்!!

கனடாவில், நடைபாதையில் சென்ற இலங்கை பெண் ஒருவர் உள்ளிட்ட 10 பேர் மீது வாகனத்தை மோத செய்து கொ லை செய்த சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Alek Minassian எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ரொரன்றோவில் நடைபாதியில் சென்றுகொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது வாகனம் ஒன்றை மோதியதில் இலங்கைப்பெண் ரேணுகா அமரசிங்கா உட்பட 10 பேர் உ யிரிழந்தார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் Alek Minassian எனும் நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணையின் போது குறித்த நபர் இவ்வாறு கூறியுள்ளார். “தான் ஒரு பெண்ணை வெளியே செல்லலாம் என அழைத்தேன். எனினும், அந்த பெண் தன்னை நிராகரித்ததால் தான் நொறுங்கிப்போனேன். என்னுடைய சோகங்களுக்குள் மூழ்கிக்கிடப்பதற்கான நேரமல்ல அது.

செயலில் இறங்கும் நேரம் என உணர்ந்தேன். அப்போதுதான் வாகனம் ஒன்றினால் மக்கள் மீது மோதியதாகவும் தெரிவித்துள்ளார். எனது பணியை நிறைவேற்றிவிட்டேன் என்பதுபோல் உணர்ந்தேன்” என அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

You might also like