வெளிநாட்டில் தமிழர் ஒருவருக்கு 11 1/2 ஆண்டுகள் சி றை த ண்டனை விதிப்பு!!

வெளிநாட்டில் தமிழர் ஒருவருக்கு 11 1/2 ஆண்டுகள் சி றை த ண்டனை விதிப்பு!!

சிங்கபூரில் க த்தியைக் காட்டி மி ரட்டி கொ ள்ளையிட்ட தமிழர் ஒருவருக்கு 11 1/2 ஆண்டுகள் சி றை த ண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐம்பது வயதான விஸ்வநாதன் வடிவேலு என்பவருக்கு இவ்வாறு சி றைத் த ண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

“அப்பர் புக்கிட் தீமா வீதியில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் ஆ யுதத்தைக் காட்டி கொ ள்ளையடித்த கு ற்றத்திற்காக 50 வயதான விஸ்வநாதன் வடிவேலுவிற்கு பதினொன்றரை ஆண்டுகள் சிறைத் த ண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 31ம் திகதி அவர் இந்தக் கு ற்றச்செயலை அரங்கேற்றினார். போ தைப் பொருள் எடுத்துக்கொண்டது தொடர்பிலான இரு குற்றச்சாட்டுகளையும் போ தைப் பொருள் வைத்திருந்ததாக ஒரு கு ற்றச்சாட்டையும் கு ற்றவாளி ஒப்புக்கொண்டார்.

நீதிமன்ற விசாரணையின்போது இடைவேளை நேரத்தில் சந்தேகநபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விஸ்வநாதன் சார்பில் அவரே வாதாடினார்.

தனக்கு ம னநிலை சரியில்லை என்றும் வீட்டிற்குச் செல்லும்படி தனக்குள்ளேயே குரல் கேட்டதால் கடந்த 17ம் திகதி நீதிமன்றத்திலிருந்து த ப்பியோடினேன் என்றும் நீதிபதியிடம் கூறியுள்ளார்.

விஸ்வநாதன் தப்பி வந்தது குறித்து அவருடைய தாயார் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவரது வீட்டில் வைத்தே அவர் கை து செய்யப்பட்டார். பின் மீண்டும் கடந்த 19ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தன்னை மனநலக் கழகத்திற்கு அனுப்புவதை த ண்டனையாக விதிக்குமாறு நீதிபதியிடம் விஸ்வநாதன் வடிவேலு கேட்டுக்கொண்டார். எனினும், மனநலக் கழகத்திற்கு அனுப்புவது என்பது த ண்டனையாகாது என்று நீதிபதி கூறிவிட்டார்.

கு ற்றம் நிகழ்ந்த சமயத்தில் விஸ்வநாதன் வேலையின்றி இருந்ததாகவும், அதனால் பணத் தேவைக்காக எரிபொருள் நிலையத்தில் கொ ள்ளையடித்ததாகவும் கூறப்பட்டது.

அன்று நண்பகல் நேரத்தில் அப்பர் புக்கிட் தீமா வீதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார் இவர். அங்கிருந்த மேம்பாலத்திற்கு அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, சாம்பல் நிற ஒட்டுப்பட்டையால் அதன் பதிவெண்ணை மறைத்தார்.

அதன்பிறகு, தமது அடையாளத்தை மறைக்கும் நோக்கில் ‘ஜாக்கெட்’, கையுறை, குளிர்கண்ணாடி ஆகியவற்றை அணிந்து கொண்ட இவர், மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த சமையலறை க த்தியை எடுத்துக்கொண்டு, அந்த எரிபொருள் நிலையத்தினுள் புகுந்தார்.

காசாளர் முகப்பிற்குப் பின்புறமாகச் சென்று, அங்கிருந்த காசாளரைக் க த்தியைக் கா ட்டி மி ரட்டி, பணப் பெட்டியைத் திறக்குமாறு இவர் ச த்தமிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ப யத்தில் அந்தப் பெண் காசாளர் அவ்வாறே செய்ய, பணப்பெட்டிக்குள் இருந்து ஆயிரம் வெள்ளிக்கு மேல் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார் இவர். ஆயினும், நான்கு மணி நேரத்தில் பொலிஸார் இவரைக் கைது செய்தது.

இரு நாட்களுக்குப் பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆயினும், போ தைப் பொருள் குற்றங்களுக்காகச் சந்தேகத்தின் பேரில் 2017 செப்டம்பர் 15ம் திகதி பொலிஸார் இவரை மீண்டும் கைது செய்தனர்.

இம்மாதம் 17ம் திகதி இவருக்கு த ண்டனை அறிவிக்கப்படவிருந்த நிலையில், நீதிமன்றத்திலிருந்து தப்பியதால் நீதிபதி இவருக்கெதிராக பி டியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like