பெண் இராணுவ சிப்பாயை பொலிஸாரிடம் ஒப்படைத்த ஊர் மக்கள்! ஏன் தெரியுமா?

பிறிதொரு ஆணுடன் தவறான தொடர்பை கொண்டிருந்த பெண் இராணுவ சிப்பாயையும் அந்த ஆணையும் பெண்ணின் கணவருடைய தந்தை மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் கேகாலை அரநாயக்க பிரதேசத்தில் நடந்துள்ளது.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண் போயகன இராணுவ முகாமில் பணியாற்றி வருகிறார்.

கட்டுகஹா, உஸ்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண்ணுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

கணவனும் மனைவியும் ஒரே இராணுவ முகாமில் பணி புரிந்து வருகின்றனர். கணவன் பயிற்சி ஒன்று சென்றிருந்த போதே மேற்படி சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் இராணுவ சிப்பாய், கணவரின் தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கணவரின் வீட்டில் வசித்து வருகிறார்.

கணவன் பயிற்சிக்கு சென்றிருந்த போது பெண், ஆணை வரவழைத்திருந்ததுடன் கணவன் தந்தையை இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சம்பவம் குறித்து அரநாயக்க பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like