சாவகச்சேரியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை

யாழ். சாவகச்சேரி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , கைதடி பகுதியில் வசித்த இளைஞன் ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த வாலிபர், 29வயதான தங்கவடிவேல் உதயகுமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர் கைதடி கிழக்கு பகுதியில் வசித்து வந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் பற்றி தகவல் அறிந்தவுடன் சாவகச்சேரி பொலிசார் சடலத்தைக் கைப்பற்றி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.

இளைஞரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like