போதைப் பொருள் வைத்திருந்த இருவருக்கு ஆயுள் தண்டனை

போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க இந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளார்.

தர்மராஜ் சுசேந்திரன், கௌதமி திரிமாகந்தன் ஆகிய இருவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி கொழும்பு, பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை இவர்களிடம் இருந்து 1.97 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like