பத்தாயிரம் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்கும் பாகிஸ்தான்

இலங்கையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் கப்பலொன்று பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டுள்ளதாகவும், அந்த கப்பல் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கையை சென்றடையும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியதாக பாகிஸ்தான் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் 8 ஆம் திகதி 25 மெட்ரிக் தொன் அரிசியை குறுகிய கால நிவாரணமாக வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வறட்சியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்தும் உதவிகளை வழங்க உள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like