15 மாதங்களுக்குள் ஒரே இடத்தில் ப லியான 4 சகோதரர்கள் : விலகாத ம ர்மம்!!

15 மாதங்களுக்குள் ஒரே இடத்தில் ப லியான 4 சகோதரர்கள் : விலகாத ம ர்மம்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 15 மாதங்களுக்குள் ஒரே இடத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 4 சகோதரர்கள் கொ ல்லப்பட்ட சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாளூர் – மண்ணுத்தி தேசிய நெடுஞ்சாலையில் மரத்தக்காரா என்ற பகுதியிலேயே இந்த 4 சகோதரர்களும் விபத்தில் சிக்கி கொ ல்லப்பட்டுள்ளனர்.

இங்குள்ள புல்லம்பள்ளம் சந்திப்பில் விபத்துகள் அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ம ரணமடைந்த குட்டன் என்பவரது 4 மகன்களும் கடந்த 15 மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்று விட்டு, இரவில் நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

புல்லம்பள்ளம் சந்திப்பைக் கடந்த போது, லொரி மோதியதில் குட்டனின் மூத்த மகன் சுதாகரன் சம்பவ இ டத்திலேயே ம ரணமடைந்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் இதே பகுதியில் ஏற்பட்ட விபத்தில், குட்டனின் மற்றொரு மகன் சீனிவாசன் ம ரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நடந்து சில நாட்கள் கடந்த நிலையில், குட்டனின் இன்னொரு மகனான ஆனந்தனும் புல்லம்பள்ளம் சந்திப்பில் இருந்து 300 அடி தொலைவில் பைக் மோ தி இ றந்துள்ளார். ஒரே வீட்டில் 3 பேர் ப லியான பிறகும், குட்டனின் குடும்பத்தினருக்கு விபத்துகளால் ஏற்பட்ட துயரம் நீங்கவில்லை.

கடந்த சனிக்கிழமை இரவு குட்டனின் இன்னொரு மகன் உன்னி கிருஷ்ணன் புல்லம்பள்ளம் சந்திப்பில் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது, பைக் மோதி சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தார்.

இவர்கள் 4 பேரும் இரவு நேரத்தில் நடந்த விபத்தில்தான் மரணமடைந்துள்ளனர். 15 மாதங்களுக்குள் ஒரே பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 4 சகோதரர்களும் ம ரணமடைந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like