மகளை 16 வருடங்கள் வீட்டுச் சிறை வைத்த கொடூர தந்தை: அதிரவைக்கும் காரணம்

பிரேசிலில் 20 வயதில் மகள் கற்பமானதால் தந்தை அவரை 16 வருடங்கள் வீட்டுச் சிறை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் Uruburetama பகுதியில் Maria Lúcia de Almeida Braga (36) என்ற பெண் சிறிய அளவிலான வீடு ஒன்றில் எந்த ஒரு சுகாதாரமின்றி வீட்டுச் சிறையில் இருந்துள்ளார்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அப்பெண் இருந்த வீட்டின் கதவை உடைத்து பெண்ணை மீட்டுள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட பெண் 20 வயதில் கற்பமாகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, இது வெளியில் தெரிந்தால் தலை காட்ட முடியாது. இவளை கொடூரமாக தண்டிக்க வேண்டும் என்று வீட்டுச் சிறையில் வைத்துள்ளார்.

மேலும் அப்பெண் இந்த வீட்டில் 16 வருடங்கள் இருந்துள்ளார். வீட்டில் எந்த ஒரு வசதியும் இல்லை.பெரும்பாலான காலங்களில் அவர் இருட்டிலே இருந்துள்ளார்.

அந்த வீட்டினுள் எந்த ஒரு வசதியும் இல்லாத காரணத்தினால், வீடு சுகாதரமற்று கிடந்தது. இதில் அப்பெண் எப்படி தான் வாழ்ந்து வந்தார் என்று தெரியவில்லை. மிகவும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

அப்பெண்ணிற்கு உணவுகள் போன்றவைகளை அவர்கள் குடும்பத்தினர் தான் கொடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது தந்தை மற்றும் சகோதரரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

You might also like