வவுனியா நெடுங்கேனி ஐயன் கோவில் காட்டு பகுதிக்கு சென்ற இருவர் கைது

வவுனியா நெடுங்கேனி ஐயன் கோவில் காட்டு பகுதிக்கு சென்ற இருவர் கைது

வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐயன் கோவில் காட்டு பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஒலுமடு பகுதியை சேர்ந்த 36 மற்றும் 24 வயதுகளுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, பிக்கான் உள்ளிட்ட சில பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கைது செய்யபட்டவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

You might also like