சற்று முன் வவுனியாவில் துவிச்சக்கரவண்டியினை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கில் : சாரதி தப்பியோட்டம்

சற்று முன் வவுனியாவில் துவிச்சக்கரவண்டியினை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கில் : சாரதி தப்பியோட்டம்

வவுனியா வைரவப்புளியங்குளம் – புகையிரத நிலைய வீதியில் இன்று (05.10.2019) மாலை 5.25 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் – துவிச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு அருகேயிருந்து பாதையின் மறுபக்கம் மாற முற்பட்ட துவிச்சக்கரவண்டியினை குருமன்காட்டு சந்தியிலிருந்து புகையிரத நிலைய வீதியுடாக பயணித்த மோட்டார் சைக்கில் துவிச்சக்கரவண்டியினை மோதித்தள்ளி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 42 வயதுடை பெண் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் வண்டியின் சாரதியான 20 வயதுடைய இளைஞன் மோட்டார் சைக்கிலினை எடுத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like