இலங்கையில் பரவும் ஆபத்தான நோய் : பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையில் பரவும் ஆபத்தான நோய் : பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையின் பல பகுதிகளில் எலிக்காய்ச்சல் நோய் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார சங்கத்தின் செயலாளர் மஹேந்திரன் பலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த வருடத்தில் மாத்திரம் எலிக் காய்ச்சலால் 3317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதத்திலேயே அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் 717 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தில் 430 பேரும் காலியில் 321 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல், கண் சிவத்தல், தலைவலி, போன்றவை எலிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like