ஆளுனர் கேட்ட பதிலினால் தடுமாறிய விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அ.சகிலாபாணு

ஆளுனர் கேட்ட பதிலினால் தடுமாறிய விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அ.சகிலாபாணு

வடமாகாண ஆளுனரினரின் கேள்விக்கு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் சகிலாபானு பதிலளிக்க முடியாது தடுமாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட விவசாய திணைக்கள கட்டிடடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதன்போது குறித்த கட்டிடடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதி விபரம் உள்ளிட்ட விடயங்களையும், மக்கள் சந்திப்புக்கான ஒழுங்குகள் தொடர்பாகவும் வடக்கு ஆளுனர் விபரங்களை கோரினார்.

இதன்போது அதற்கு சரியான முறையில் பதிலளிக்க முடியாது தடுமாறியிருந்தார். இதனையடுத்து ஆளுனர் குறித்த உதவிப் பணிப்பாளருக்கு அறிவுரைகளை கூறியிருந்தார்.

அத்துடன், குறித்த கட்டிடம் முழுமை பெறாது திறக்கப்பட்டமை தொடர்பிலும் ஆளுனர் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் தற்காலிகமாக இயங்கும் கட்டிடத்தில் இருக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்தார். இதன்போது குறித்த கட்டிடடத்தில் உரிய இடங்களில் பெயர் பலகை மும்மொழிகளிலும் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறித்திருந்தார்.

பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் தனது அலுவலகம் தொடர்பான தகவல்களையே வழங்க முடியாது தடுமாறியிருந்தமை அங்கு நின்றவர்களை முகம் சுழிக்க வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like