கிளிநொச்சி – செஞ்சோலை மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்

கிளிநொச்சி – செஞ்சோலை மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்

கிளிநொச்சி – மலையாளபுரம், செஞ்சோலை காணியில் குடியேறியுள்ள மக்களை எதிர்வரும் 15ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்பதாக வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

குறித்த காணியின் உரிமையாளர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைவாக இந்த அறிவுறுத்தல் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

செஞ்சோலை காணியில் குடியேறியுள்ள மக்களிற்கே அந்த காணியை பகிர்ந்தளிக்க வேண்டும் என ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, குறித்த காணியினை உரிமைக்கோரி 16 குடும்பங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இவ்விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

காணி ஆவணங்களை சமர்ப்பித்திருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பிரதேச செயலகத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

>

குறித்த காணியை விட்டு வெளியேறுமாறும், இல்லையேல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிரதேச செயலகத்தினால் அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் செஞ்சோலை மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

You might also like