வவுனியா மதியாமடு வித்தியாலயம் 62 வருடகாலப் பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக வரலாற்று சாதனை

வவுனியா மதியாமடு வித்தியாலயம் 62 வருடகாலப் பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக வரலாற்று சாதனை

வவுனியா வடக்கு வலய பாடசாலையில் ஒன்றான வவுனியா மதியாமடு வித்தியாலயத்தில் 62 வருடகாலப் பாடசாலை வரலாற்றில் 4 மாணவர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளார்கள்.

குறித்த பாடசாலையில் புலமைபரிசில் பரீட்சையில் இதுவே முதல் வரலாற்றுச் சாதனையாகும். இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு 16 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் சிவகுமார் ஜிபிகா -179 புள்ளிகளையும் சிறிஸ்கந்தராசா சாம்பவி -168 புள்ளிகளையும் தர்மகுலசிங்கம் டிலக்சிகா 165 புள்ளிகளையும் விமலதாஸ் திவ்யா – 159 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அத்துடன் ஏனைய மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பேறுபெற்றினை பெற்றுள்ளனர்.

இச் சாதனையினை நிலைநாட்டுவதற்கு உறுதுணையாகவிருந்த பாடசாலை அதிபர் சி.சிவராசா மற்றும் ஆசிரியர்களான கிரிசாந்தினி சந்திரன் அவர்களுக்கு பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துள்ளது.

You might also like