கேப்பாபுலவு மக்களின் மண் மீட்பு போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேரில் சென்று ஆதரவு!

கேப்பாபுலவு மக்களின் மண் மீட்பு போராட்டம் 30வது நாளாக தொடர்கின்றது,தமிழ் தேசியகூட்டமைபின் பாராளுமன்ற  உறுப்பினர் சுமந்திரன் நேரில் சென்று ஆதரவு!

கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த கிராமத்தையும் வீடுவாசல்களையும் கையகப்படுத்தி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் நேற்று (30,03) 30வது நாளாக தீர்வின்றி தொடர்கின்றது.

கடந்த முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் 30வது நாளாக தொடரும் இந்த மக்களின் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை நேரில் பார்வையிட்டு தனது ஆதரவினையும் மக்களின் வேண்டுகோளினையும் கேட்டு அறிந்துகொண்டார்.

இந்த நிலையில் போராடட களத்தில் மக்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில் நானும் சம்பந்தன்  ஐயாவும் ஜனாதிபதி அவர்களிடம் பேசினோம் அவர் உங்களின் கண்ணிகளை விடுவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஆனால் அது எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தெரியவில்லை காரணம் கேப்பாபுலவில் முல்லைத்தீவின் பிரதான பாதுகாப்பு படைதலமையகமே அமைந்துள்ளது அது வேறு ஒரு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளபடுகின்றது.எனவே எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தெரியாது ஆனால் மிக விரைவில் விடுவிப்பதர்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.என தெரிவித்தாகவும் மக்களிடம் சுமந்திரன் தெரிவித்தார்.அத்தோடு நீங்கள் உங்கள் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள் விரைவில் நல்ல முடிவை  பெற்று தருவதற்காக உரியவர்களுக்கு தொடர்ந்தும் அழுத்தத்தை தெரிவிப்போம் என தெரிவித்தார்.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் எதிர்வரும் முதலாம் திகதிவரை கூட்டமைபினருக்கு கால அவகாசம் வழங்கியிருக்கின்றோம் அதற்கிடையில் நல்ல முடிவை பெற்றுத்தாருங்கள் என வேண்டுகோள் முன்வைத்ததோடு இரண்டாம் திகதியிலிருந்து மாற்று வடிவம் எடுக்கும் நிலையில் போராட்டம் அமையும் எனவும் தெரிவித்தனர்.இதனை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் இந்த கோரிக்கை தொடர்பில் கூட்டமைப்பின் தலைவருக்கு தெரியப்படுத்துவதாகவும் விரைவில் நல்ல முடிவை பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

You might also like