வவுனியா ஊடகவியலாளர்களுக்கான தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக செயலமர்வு

வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான செயலமர்வு இன்று (31.03.2017) வவுனியா விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச் செயலமர்வில் அரச திணைக்களங்களில் இருந்து தகவலறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் முறைகள், தகவல் வழங்கும் உத்தியோகத்தரின் கடமைகள் தகவல் வழங்க மறுக்கும் பட்சத்தில் உள்ள தண்டணைகள், திணைக்கள ரீதியாக தகவல்களை வழங்குவதற்கு தகுதியுடைய உத்தியோகத்தர்கள் அவர்களது பணிகள், மக்கள் தகவலை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பாக இவ் செயலமர்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இச் செயலமர்வினை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் முறைப்பாட்டு பொறுப்பதிகாரி எம். எஸ். அமீர் உசைன் வழிநடத்தலில் சட்டத்தரணி கே. ஐங்கரன் வளவாளராக கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கியிருந்தார்.

You might also like