வவுனியாவில் தந்தை செல்வாவின் 119 ஆவது பிறந்த தினம் அனுஸ்டிப்பு

தந்தை செல்வநாயகம் என அழைக்கப்படும் தமிழரசுக்கட்சியின் தலைவரான செல்வநாயகத்தின் 119 ஆவது பிறந்ததினம் இன்று (31.03.2017) வவுனியா நகர மத்தியில் உள்ள அன்னாரது சிலையடியில் வட மாகாண சுகாதார அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை தலைவருமான ப. சத்தியலிங்கத்தின் தலைமையில் இடம்பெற்றது.

காலை 9 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்னாரது சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் சுகாதார அமைச்சரினால் நினைவுரையும் நடத்தப்பட்டது.

இதன்போது தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like