ஒரே குடும்பத்தில் 6 பேரை கொ ன்ற பெண் : மேலும் 2 பிள்ளைகளை குறிவைத்தது அம்பலம்!!

ஒரே குடும்பத்தில் 6 பேரை கொ ன்ற பெண் : மேலும் 2 பிள்ளைகளை குறிவைத்தது அம்பலம்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 6 பேரை விஷம் வைத்து கொ லை செய்த பெண், மேலும் இரு பிள்ளைகளை கொ ல்ல திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண் தமது குடும்பத்தாரை மட்டுமின்றி இன்னொரு குடியிருப்பிலும் கொ லை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த தகவலானது தற்போது நடைபெறும் விசாரணையில் அம்பலமானதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அவர்கள் யார் என்பது தொடர்பில் தகவல் வெளியிட மறுத்துள்ளனர். இந்த காரணங்களாலையே குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜோளி தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஜோளியின் முன்னாள் கணவர் ரோயி என்பவரின் வழக்கிலேயே ஆதாரங்கள் சிக்கியுள்ளதால், அந்த வழக்கை தனியாக விரிவாக விசாரிக்கப்படும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஜோளியின் இரண்டாம் கணவர் ஷாஜு இந்த விவகாரத்தில் தவறிழைத்திருந்ததாக தெரியவந்தால் அவர் மீதும் நடவடிக்கை பாயும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது காவலில் உள்ள ஜோளியை 24 மணி நேரமும் கண்காணிக்க குழுக்களை நியமித்திருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ள டி.என்.ஏ மாதிரிகளை அமெரிக்காவில் பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.

You might also like