காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்களின் போராட்டத்தில் வட மாகாண சுகாதார அமைச்சர் பங்கேற்பு

வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 36 ஆவது நாளாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலங்கம் கலந்துகொண்டிருந்தார்.

தந்தை செல்வாவின் 119 ஆவது பிறந்த தின நிக்வுகள் வவுனியா நகர மத்தியில் இடம்பெற்றதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்ட தளத்திற்கு சென்ற சுகாதார அமைச்சர் உட்பட்ட வவுனியா தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இதன் போது பல தாய்மார் கண்ணீர் விட்டழுது தமது நிலைமைகளை விளக்கியிருந்ததுடன் தமது பிள்ளைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

You might also like